மீண்டும் தமிழில் பிசியாகும் நஸ்ரியா

மீண்டும் தமிழில் பிசியாகும் நஸ்ரியா
பிரபல மலையாள நடிகையான நஸ்ரியா, தமிழில் நேரம், ராஜாராணி, நையாண்டி, திருமணம் எனும் நிக்கா போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகர் பகத்பாசிலை திருமணம் செய்து கொண்ட அவர் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.2018-ம் ஆண்டு ‘கூடே’ என்ற மலையாள படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். இருப்பினும் தமிழில் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார்.சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு  படத்தில் அவர் நடிப்பதாக இருந்தது.தவிர்க்க முடியாத காரணத்தினால் அந்த படமும் கைவிடப்பட்டது. தற்போது சூர்யா பிரதாப் இயக்கத்தில் உருவாகும் ‘தி மெட்ராஸ் மிஸ்ட்ரி பால் ஆஃப் எ சூப்பர் ஸ்டார்’ என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். அதே போல் ஆவேசம்’ புகழ் ஜித்து மாதவன் இயக்கும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்து வருகிறார்.

Comments (0)
Add Comment