சூர்யாவிற்கு ஜோடியாகும் நஸ்ரியா
நடிகர் சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து அவரின் 47வது படத்தை இயக்குனர் ஜித்து மாதவன் இயக்க இருக்கிறார். இவர் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஆவேசம்’ படத்தை இயக்கியவர். 2டி நிறுவனமும், ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த நிலையில் இதில் ஹீரோயினாக நடிக்க நடிகை நஸ்ரியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.ஏற்கனவே புறநானூறு படத்தில் சூர்யாவுடன் இணைந்து நஸ்ரியா நடிப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.