ரொமான்டிக் சீனில் நடித்த நயன்தாரா
தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‛சைரா நரசிம்ம ரெட்டி, காட்பாதர்’ போன்ற படங்களில் நடித்த நயன்தாரா தற்போது அவரின் 157வது படத்திலும் நடிக்கிறார். அனில் ரவிபுடி இயக்கும் இந்தப் படத்தில் சிரஞ்சீவியும், நயன்தாராவும் திருமணமான தம்பதிகளாக நடித்து வருகிறார்கள். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முசோரியில் நடந்த நிலையில்,
தற்போது ஒரு காதல் பாடல் கேரளாவில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் அவர்களுக்கு இடையே ரொமான்டிக் காட்சிகள் அதிகமாக இருக்கும் என்றும், தாங்கள் காதலித்த காலகட்டத்தை அவர்கள் நினைவு கூறும் இளமை ததும்பும் காட்சிகள் இருக்கும் என்றும் இயக்குனர் அனில் ரவி புடி தெரிவித்துள்ளார். இப்படம் 2026 ம் ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகிறது.