போலீசாக நட்டி நடிக்கும் ரைட்

போலீசாக நட்டி நடிக்கும் ரைட்
ஜில்லா, புலி படங்களில் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்த சுப்பிரமணியன் ரமேஷ் குமார் ரைட் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். இதில் நட்டி, அருண் பாண்டியன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ஆர்.டி.எஸ். பிலிம் பேக்டரி சார்பில் திருமால் லட்சுமணன், சியாமளா ஆகியோர் தயாரித்துள்ளனர். படம் பற்றி இயக்குனர் சுப்ரமணியன் ரமேஷ் குமார் கூறியது,பொது மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் போலீஸ்சிடம் செல்வார்கள். ஆனால் அந்த போலீசுக்கே பிரச்சினை என்றால் என்ன செய்வார்கள்? என்பதை பரபரப்பான சம்பவங்களுடன் கமர்சியல் திரில்லராக உருவாகி உள்ளோம்.

Comments (0)
Add Comment