நறுவீ -பட விமர்சனம்
குன்னூர் அருகே உள்ள மலை கிராமத்தில் ஆண்கள் சிலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறக்கின்றனர். அதர்க்கான காரணத்தை தேடி சென்னையில் இருந்து ஒரு டீம் புறப்பட்டு செல்கிறது. அங்கு அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தான் படத்தின் மீதி கதை.மலை கிராம மக்களுக்கு கல்வி வசதி வேண்டும் என்கிற ஒரு வரி கதையை ஹாரர் சேர்த்து இயக்குனர் எம். சுபாரக் கொடுத்திருக்கிறார் . இருப்பினும் திரைக்கதை பலகீனமாக இருப்பதால் சுவாரஸ்யம் குறைகிறது. பள்ளி ஆசிரியராக நடித்துள்ள ஹரிஷ் திரையில் இயல்பாக தெரிகிறார்.அதேபோல் பாடி குமார், வி ஜே. பப்பு, கேத்ரின் வருணா, ஜீவா ரவி, பிரவீனா ஆகியோர் நடிப்பு ஓகே ரகம். மேலும் ஒளிப்பதிவு மற்றும் இசை படத்திற்கு பிளஸ்.