விஜய் தேவரகொண்டா படத்தை தொடங்கி வைத்த நானி
நானி நடித்த ‘ஹாய் நன்னா’ பட இயக்குனர் சவுர்யுவ் இயக்கத்தில் புதிய படம் உருவாக இருக்கிறது.இதில் கதாநாயகனாக விஜய் தேவர கொண்டா நடிக்க உள்ளார். இதன் பூஜை ஐதராபாத்தில் நடந்தது. விழாவில் நடிகர் நானி கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். சமீபத்தில் வெளியான இதன் அறிவிப்பு போஸ்டரில் 4 நாய்களை பிடித்தபடி விஜய் தேவர கொண்டா வருவது போன்ற காட்சி வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. பான் இந்தியா படமாக தயாராகும் இதை வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.