‘நாகபந்தம்’ படத்தின் நமோ ரே வெளியீடு

‘நாகபந்தம்’ படத்தின் நமோ ரே வெளியீடு
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான ‘நமோ ரே பாடல் வெளியிடப்பட்டு ள்ளது. அபிஷேக் நாமா இயக்கத்தில் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோரின் தயாரிப்பில் உருவான இந்த படத்துக்கு ஜுனைத் குமார் மற்றும் அபே ஆகியோர் இசையமைத்துள்ளனர். சௌந்தர்ராஜன் எழுதிய இந்த பாடலை பாடகி ஹரி பிரியா பாடியுள்ளார். ஆயிரம் நடன கலைஞர்கள் பங்கேற்ற இந்த பாடலை கணேஷ் ஆசார்யா மற்றும் ஸ்ரஷ்டி வர்மா ஆகியோர் கோரியோ கிராப் செய்துள்ளனர்.

Comments (0)
Add Comment