நல்ல படம் -விமர்சனம்

நல்ல படம் -விமர்சனம்
போதைக்கு அடிமையான ஹரிஷ், குடிப்பவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் ‘மது பிரியர்கள்
மறுமலர்ச்சி சங்கம்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். திடீரென மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டால், மதுவையே வாழ்க்கையாக நினைத்துக் கொண்டிருக்கும் ஹரிஷின் நிலை என்ன ஆகிறது என்பது தான் படத்தின் கதை.மதுவுக்கு அடிமையான ஒருவனின் வாழ்க்கையை யும், மதுவிலக்குக்கு எதிராக அவன் நடத்தும் போராட்டத் தையும் மையமாக வைத்து கதையை இயக்குநர் பிரபுராம் இயக்கியுள் ளார் . போதையில் மிதந்து கொண்டிருக்கும் கதாபாத்திர மாகவும், காதல் காட்சிகளி லும், ஆக்ஷன் காட்சிகளிலும் ஹரிஷ் தேவையான அளவு நடிப்பை வழங்கியிருக் கிறார். ஹரிஷை காதலிக்கும் பெண்ணாக தனலட்சுமி, காதலுக்காக போராடும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். கதாநாயகனின் அம்மாவாக ரமாவும், நண்பர்களான கல்கி ராஜா, மொட்டை ராஜேந்திரனும் தங்கள் கேரக்டரை சிறப்பாக செய்துள்ளனர். ஜெ.ஹாரிஸ் ஒளிப்பதிவு மற்றும் சஜிஷ்னா சேவியரின் இசை சுமார் ரகம்

Comments (0)
Add Comment