நாகார்ஜுனா 100 பட ஸ்பெஷல் அப்டேட்

நாகார்ஜுனா 100 பட ஸ்பெஷல் அப்டேட்
சமீபத்தில் வெளியான ‘குபேரா மற்றும் கூலி’ படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நாகார்ஜுனா,அடுத்ததாக நித்தம் ஒரு வானம், ஆகாசம் போன்ற படங்களை இயக்கிய தமிழ் இயக்குனர் ரா. கார்த்திக் இயக்கத்தில் தனது 100-வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக கிங்100 என்று பெயரிடப்பட்டுள்ளது.இதில் நாக சைதன்யா மற்றும் அகில் அக்கினேனி ஆகியோர் சிறப்பு வேடங்களில் நடிப்பார்கள் என்றும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ள இந்த படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். இதனால் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Comments (0)
Add Comment