‘நாகபந்தம் ‘படத்தின் டீசரை மகேஷ் பாபு வெளியிட்டார்
அபிஷேக் நாமா இயக்கத்தில் விராட் கர்ணா நடிப்பில் புராண ஆக்சன் படமான ‘நாக பந்தம்’ படத்தின் டீசரை மகா சிவராத்திரி நாளில் நடிகர் மகேஷ்பாபு வெளியிட்டார். இந்த படத்தை தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோரின் தயாரித்துள்ளனர்.இந்தத் திரைப்படம் உலகத் தரம் வாய்ந்த அளவிலான பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகி இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் தயாரிப்பு வடிவமைப்பு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. படக்குழுவின் துணிச்சலான பார்வை ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிப்பதுடன் ஆன்மீகத்தின் ஆழமும் காட்சி மொழிகளில் கலந்திருக்கிறது.