நாளை நமதே- பட விமர்சனம்
அறிமுக இயக்குநர் வெண்பா கதிரேசன் இயக்கியுள்ள படம் நாளை நமதே. இதில் மதுமிதா,வேல்முருகன்,ராஜலிங்கம்,செந்தில் குமார்,முருகேசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரவீன் ஒளிப்பதிவு செய்ய, ஹரிகிருஷ்ணன் இசை அமைத்துள்ளார். ஸ்ரீ துர்கா கிரியேஷன்ஸ், ரவிச்சந்திரன் தயாரிக்க,அம்மா கிரியேஷன்ஸ், டி.சிவா படத்தை வெளியிட்டுள்ளார் சிவகங்கை மாவட்டத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் போது, பொது தொகுதி, தனி தொகுதி என்ற பிரச்சனையால் பெரிய கலவரம் வெடிக்கிறது. இதை தொடர்ந்து தேர்தல் எப்படி நடந்தது? யார் வெற்றி பெற்றார்கள்? என்பதுதான் நாளை நமது படத்தின் கதைக்களம். லீட் ரோலில் நடித்துள்ள மதுமிதாவவின் இயல்பான நடிப்பு நேர்த்தியாக உள்ளது. பின்தங்கிய சமூக மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை விழிப்புணர்வாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் வெண்பா கதிரேசன். இருப்பினும் பல காலமாக பார்த்து பழகிய கதை என்பதால் சலிப்பு தட்டுகிறது. ஹரிகிருஷ்ணனின் இசை மற்றும் பிரவீன் ஒளிப்பதிவு கதையோடு ஒன்றி பயணிக்க வைக்கிறது.