3 காடுகளை பற்றி எடுப்பதுதான் எனது லட்சியம்: வ.கெளதமன்
இயக்குனர் வ.கெளதமன் இயக்கி, நடித்துள்ள படம்’ படையாண்ட மாவீரா’. இதன் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் கௌதமன் பேசியது, என்னுடைய வாழ்நாள் லட்சியமே மூன்று காடுகள் பற்றிய படங்கள் எடுப்பது தான். ஒன்று வீரப்பன் வாழ்ந்த சந்தனக்காடு, அதை நிறைவேற்றி விட்டேன். இரண்டாவது காடுவெட்டி குரு வாழ்ந்த முந்திரிக்காடு, தற்போது இதை எடுத்துள்ளேன். மூன்றாவது பிரபாகரன் வாழ்ந்த வன்னிக்காடு ஆகும். அந்தப் படத்தையும் கட்டாயம் எடுப்பேன் என்றார்.