‘ மக்கள் தலைவா’ படத்தின் இசை வெளியீடு

‘ மக்கள் தலைவா’ படத்தின் இசை வெளியீடு
கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் நடிகர் ரவி மரியா கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘மக்கள் தலைவா ‘ . இதில் ரவி மரியாவுடன், அக்சரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, கவிதாலயா சரவணன், அக்னி எஸ்.வருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு கார்த்திக் எஸ். நாயர் ஒளிப்பதிவு செய்ய, துளசி ராமன் இசையமைத்துள்ளார். காமெடி வித் பொலிடிக்கல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த படம் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குநர்கள் கே. பாக்யராஜ், ஆர். கே. செல்வமணி, ஆர். வி. உதயகுமார், எழில் , நந்தா பெரியசாமி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment