நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் சல்லியர்கள்

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் சல்லியர்கள்
மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவாகியுள்ள படம் ‘சல்லியர்கள்’.இந்த படத்தை சி டபிள்யு நிறுவனம் சார்பில் கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ளனர். இதில் சத்யா தேவி, கருணாஸ்,திருமுருகன், மகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுத, கருணாஸ், அவரது மகன் நடிகர் கென் கருணாஸ் மற்றும் ஈஸ்வர் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.இந்தப் படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மூலமாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட திட்டமிட்டு கடந்த 1ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்த நிலையில்,தியேட்டர்கள் இந்த படத்தை வெளியிட மறுத்ததால் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியிடப்படும் என சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.

Comments (0)
Add Comment