ஓடிடியில் மூன்றாம் பிறை

ஓடிடியில் மூன்றாம் பிறை
பாலு மகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் கடந்த 1982-ம் ஆண்டு வெளியான படம் மூன்றாம் பிறை. மாபெரும் வெற்றி படமாக அமைந்த இந்தப் படத்தில் கமல்ஹாசனும் ஸ்ரீதேவியும் போட்டி போட்டு நடித்திருந்தனர். இளையராஜா இசையில் இதில் இடம் பெற்ற கண்ணே கலைமானே, பொன்மேனி உருகுதே, பூங்காற்று புதிதானது போன்ற பாடல்கள் ரசிக்கும் படியாக அமைந்திருந்தது. இந்த படத்தில் சிறந்த நடிகருக்கான முதல் தேசிய விருதை கமல்ஹாசன் பெற்றார். ஒரு வருடத்திற்கு மேல் இந்தியாவில் உள்ள பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி மூன்றாம் பிறை படம் சாதனை படைத்தது. இந்நிலையில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மே1 முதல் அமேசான் பிரைம் வீடியோ ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது.

Comments (0)
Add Comment