ஸ்ரேயாவுடன் குத்தாட்டம் போட்ட மெட்ரோ சிரிஷ்
ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘நான் வயலென்ஸ்’. இதில் மெட்ரோ சிரிஷ், யோகிபாபு, பாபி சிம்கா உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.கே.பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் லேகா தயாரித்துள்ள இந்த படம் 90களில் மதுரை மாநகரத்தை சுற்றி கதை நடக்கும்படியாக அமைக்கப் பட்டுள்ளது.இதில் ஒரு சிறப்பு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா நடனமாடியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் சிரிசுடன் அவர் சேர்ந்து குத்தாட்டம் போடும் போட்டோக்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு இந்த குத்து நடனம் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது.