வெட்கத்தில் சிரிக்கும் மீனாட்சி சௌத்ரி!! எதுக்கு தெரியுமா?
கொலை, சிங்கப்பூர் சலூன்,கோட் , லக்கி பாஸ்கர், ஹிட் -2 உள்ளிட்ட ஏராளமான தென்னிந்திய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனாட்சி சௌத்ரி. நடிப்பு மட்டுமின்றி சமூக வலைதளத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்ட மீனாட்சி சவுத்ரியின் இன்ஸ்டா பக்கத்தை 3.1 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடருகிறார்கள். இவர் சமீபத்தில் நேபாளம் நாட்டிற்கு சுற்றுலா சென்றார். தனது நேபாள் டூர் குறித்த புகைப் படங்களை மிகவும் ஆசையாக சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.இதில் வெட்கட்தோடு அவர் சிரிக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏராளமான கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர். அதில் மீனாட்சி சவுத்ரி தனியாக சென்றுள்ளதால் விரைவில் அவருக்கு காதலர் கிடைக்க வேண்டும் என்ற வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.