பாலகிருஷ்ணாவின் 111-வது படத்தின் மாஸ் லுக்

பாலகிருஷ்ணாவின் 111-வது படத்தின் மாஸ் லுக்
நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள அவரது 111-வது படத்தின் க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு இந்த விடியோ வெளியானது. தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பாலகிருஷ்ணா 1974 முதல் நடித்து வருகிறார். முதன்முதலாக 1984ல் சாகசமே ஜீவிதம் எனும் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி அசத்தினார்.விருத்தி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, மஞ்சு மனோஜ், சரத் குமார், அபிமன்யு சிங், ஸ்வாசிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

Comments (0)
Add Comment