மரகத மலை- விமர்சனம்

மரகத மலை- விமர்சனம்
ஜமீன்தாராக இருக்கும் சந்தோஷ் பிரதாப் தனது மனைவி தீப்ஷிகா மற்றும் மகனுடன்
வாழ்ந்து வருகிறார். அவரின் முன்னோர்கள் அங்குள்ள மரகத மலையில் உள்ள தங்கம், வைரம் போன்ற அளவிட முடியாத செல்வங்களை பாதுகாப்பதோடு,அந்த மலைக்கு செல்லும் ரகசிய குறிப்பை யும் பாதுகாத்து வருகிறார்கள். செல்வத்தை அபகரிக்க கொள்ளை கும்பல் வருகிறது. அமானுஷ்யங்கள் நிறைந்த அந்த மலையில் அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை. ஜமீன்தார் கேரக்டரில் சந்தோஷ் பிரதாப் சிறப்பான நடித்துள்ளார். தீப்ஷிகா அழகும் உணர்வும் கலந்த நடிப்பை கொடுத்து ள்ளார். தம்பி ராமையா, ஜெகன் ஆகியோரின் காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கிறது. குழந்தைகளுக்கான ஒரு பேண்டஸி கதையை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குனர் லதா.பி.ஜி.முத்தையா வின் ஒளிப்பதிவு, எல்.வி.முத்து கணேஷின் இசை ஓகே ரகம்.

Comments (0)
Add Comment