எனக்கு ஹீரோயினாக நடிக்க பலர் சம்மதிக்க வில்லை:ரஜினிகிஷன்
ரமேஷ் பாரதி இயக்கத்தில் ரஜினி கிஷன் தயாரித்து நடித்துள்ள படம் ‘ரஜினி கேங்’. இதில் ஹீரோயினாக திவிகா நடிக்க,மொட்டை ராஜேந்திரன்,ராம்தாஸ், கூல் சுரேஷ், கல்கிராஜா உள்பட பலர் நடித்து உள்ளனர்.‘புளு’ என்ற நாய் படம் முழுவதும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைத்துள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் ரஜினிகிஷன் பேசியது, இந்த படம் எனது 3-வது படம். ஏற்கனவே 2 படம் நடித்து விட்டேன். படத்தில் எல்லா பெரிய நடிகர்களை யும் கமிட்செய்து விட்டோம், ஆனால் எனக்கு ஹீரோயின் மட்டும் செட்டாக வில்லை. பலரை அணுகினோம் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. இறுதியாக தான் திவிகா வந்தார். என்னுடன் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு நன்றி என்றார்.