ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மமீதா பைஜூ

ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மமீதா பைஜூ
2017-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘சர்வோபரி பாலக்காரன்’ என்ற படத்தின் மூலம் மமீதா பைஜூ ஹீரோயி னாக அறிமுகமானார். மலையாளத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள இவர், ‘பிரேமலு’ படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் இடம் பிடித்தார். அதன் பிறகு ஜிவி பிரகாஷ் உடன் ரெபல், பிரதீப் ரங்கநாதனுடன் டியூட், தனுஷ் உடன் கர ஆகிய படங்களில் நடித்தார். விஜய்யுடன் இவர் சேர்ந்து நடித்த ஜனநாயகன் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் விமன் சென்ரிக் படத்தில் மமீதா லீடு ரோலில் நடிக்கிறார். அதோடு தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்த வருகிறார். இப்படி பிசியாக நடித்து வரும் அவர் சோசியல் மீடியாவிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனது படங்கள் மற்றும் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை அதில் பதிவிடுவார். இந்த நிலையில் திடீரென சோசியல் மீடியாவில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள் ளார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Comments (0)
Add Comment