மமீதா பைஜு காட்டில் அடைமழை (அ)
டாப் ஹீரோக்களுக்கு ஜோடியான மமீதா
‘பிரேமலு’ படத்தின் மூலம் பிரபலமான மமீதா பைஜு, தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.பிரதீப் ரங்கநாதனுடன் அவர் நடித்துள்ள ‘டியூட்’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. அடுத்து விஜய்யுடன் ‘ஜனநாயகன்’ படத்தில் முக்கிய
கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது. அதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமீதா நடித்து வருகிறார். அதோடு தனுசின் 56-வது படத்திலும்
இவர் தான் ஹீரோயின். இது மட்டுமின்றி விஷ்ணு விஷாலின் இரண்டு வானம் படத்திலும் நடிக்கிறார்.இதன் மூலம் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துள்ள டாப் நடிகைகள் லிஸ்டில் மமீதாவும் இடம் பிடித்துள்ளார்.