மாளவிகா மோகனன் கேரக்டர் பெயர் பைரவி

 

மாளவிகா மோகனன் கேரக்டர் பெயர் பைரவி
மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் ‘ராஜாசாப்’. இதில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். வில்லனாக சஞ்சய் தத் நடிக்கிறார். இப்படத்தை டிஜி விஷ்வா பிரசாத் தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் ராஜா சாப் படத்தில் மாளவிகா மோகனன் நடிக்கும் கதாபாத்திரம் குறித்து போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பைரவி என்ற கேரக்டரில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இப்படம் 5 மொழிகளில் வரும் ஜனவரி 9ம் தேதி வெளியாகிறது.

Comments (0)
Add Comment