மம்முட்டி குறித்து நெகிழ்ந்துள்ள மாளவிகா மோகனன்
நடிகர் மம்முட்டியின் பிறந்தநாள் முன்னிட்டு அவருடன் இருக்கும் புகைப்படத்தை நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டு கூறியது, துல்கர் சல்மானுடன் நடிப்பதற்காக நான் ஆடிசன் சென்றிருந்தேன். மம்முட்டி என்னை பார்த்து அந்த படத்தில் சிபாரிசு செய்தார். தற்போது நான் மோகன் லாலுடன் இணைந்து நடித்துள்ள ஹிருதயபூர்வம் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்க்கும் போது என் பயணம் எங்கே தொடங்கியது என்று என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. நான் திரை உலகத்திற்கு வருவதற்கு காரணமாக இருந்த அந்த மனிதரை நினைத்துப் பார்க்கிறேன் மாயாஜாலம் நிறைந்த திரைப்பட உலகிற்கு என்னை கொண்டு வந்ததற்கு அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் மம்முக்கா என கூறியுள்ளார்.