பாலிவுடில் மாளவிகா மோகனன்
மலையாளம்,தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகனன் தற்போது பாலிவுட் திரை உலகிலும் அறிமுகமாகி புதிய படங்களில் நடிக்க தொடங்கி யுள்ளார். அதோடு இந்தி வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.சமீபத்தில் மும்பை சாலையில் மாளவிகா மோகனன் ஹாயாக நடந்து வந்து கொண்டிருந்தார். மாளவிகா தனியாக வருவதை கண்ட ரசிகர்கள் அவரை செல்போனில் படம் பிடிக்க தொடங்கினர். அவர்களுக்கு உற்சாகமாக போஸ் கொடுத்தார். இந்த போட்டோக்கள் சமூகவலை தளங்களில் வைரலாகி உள்ளது.