மாளவிகா என் லக்கி ஹீரோயின்: ரியோ ராஜ்
அறிமுக இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் நடிப்பில் கடந்த 31-ந் தேதி ரிலீஸ் ஆன படம் ‘ஆண்பாவம் பொல்லாதது’.இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சக்சஸ் மீட் சென்னையில் நடந்தது. இதில் நடிகர் ரியோ ராஜ் பேசியது, “இந்த படத்தின் வெற்றி எனக்கு மட்டும் சொந்தமில்லை.என்னுடன் நடித்த மாளவிகாவுக்கும் சம பங்கு உண்டு. கதையை உள்வாங்கிக் கொண்டு அவர் அந்த கேரக்டராக மாறி நடித்ததால் தான் இந்த வெற்றி கிடைத்தது. எனவே இந்த வெற்றியில் இருவருக்கும் பங்கு உண்டு. அதோடு மாளவிகா எனக்கு அதிர்ஷ்டமான கதாநாயகி என்றார்.