மகுடம் -விமர்சனம்

மகுடம் -விமர்சனம்
சென்னையில் மெடிக்கல் ரெப்பாக வேலை செய்யும் விஷால், தனது மனைவி துஷாரா விஜயன் மற்றும் மகன், மகளுடன் ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். குடும்பத்தினரின் ஆசைப்பட்டதால், பழைய சொகுசு கார் ஒன்றை தவணை முறையில் வாங்குகிறார். அந்தக் காரில் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் போது, ஒரு ரவுடி கும்பல் கார் மீது துப்பாக்கியால் சுட்டதில் மனைவியும், மகளும் கொல்லப்படுகி ன்றனர்.மகனுடன் காட்டுக்குள் தப்பிச் செல்லும் விஷால், ஒரு கட்டத்தில் தன்னைத் துரத்தும் எதிரிகளை துவம்சம் செய்கிறார். இதற்கெல்லாம் காரணம் தனது தந்தையின் பின்னணி தான் என தெரிய வருகிறது. விஷாலின் தந்தை யார்? அவரது பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதி கதை. பார்த்து, பழகி, சலித்து போன அதே அப்பா, மகன் கதையை ஆக்சன், செண்டிமெண்ட் ஜர்னரில் கொடுத்துள்ளார் இயக்குனர் விஷால். இயக்குனராக முதல் படம் என்பதால் தனது முந்தைய படங்களின் பாதிப்பை இதில் அப்பட்டமாக காட்டியுள் ளார். முதல் பாதியில் பொறுமையை சோதித்தாலும் இரண்டாம் பாதியில் சற்று ரசிக்க வைக்கிறார். படத்தில் நீளம் பெரும் மைனஸ். நடிகராக தந்தை, மகன் என இரு கேரக்டர்களில் விஷால் வித்தியாசம் காட்டியிருக்கிறார். துஷாராவுக்கு சொல்லிக் கொள்ளும் படியாக கேரக்டர் இல்லை. அதேநேரம் அஞ்சலி ஸ்கோர் செய்கிறார். ஜான் விஜய், ஜெயபிரகாஷ் நடிப்பு ஓகே. ஜீவி பிரகாஷ் குமாரின் இசை, ரிச்சர்ட் எம். நாதன் மற்றும் அபிநந்தன் ராமானுஜம் ஆகியோரின் ஒளிப்பதிவு அருமை.

Comments (0)
Add Comment