‘ மதுரை 16 ‘படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
முழுக்க முழுக்க மதுரை மண்ணின் மைந்தர்களைக் கொண்டு முற்றிலும் புதியவர்களின் பங்கேற்பில் ‘மதுரை 16’ என்கிற அரசியல் திரில்லர் படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தை ஜான் தாமஸ் இயக்கியுள்ளார். ஜெரோம் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார்.ஜே எஸ் ஃபிலிம்ஸ் வழங்கும் ஸ்ரீதேவி சின்னையா, ஜீன் வில்லியம்ஸ் தயாரித்துள்ளனர்.உத்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ் ஹரி உத்ரா வெளியிடுகிறார்.
இந்த படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர் பேரரசு,சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அன்புச் செல்வன், நடிகர் ரோபோ சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.