மேட் இன் கொரியா -விமர்சனம்

மேட் இன் கொரியா -விமர்சனம்
பள்ளி பருவத்திலேயே கொரியா நாட்டு இசை மற்றும் நடனத்தால் ஈர்க்கப்படும் பிரியங்கா மோகன், வாழ்க்கையில் ஒரு முறையாவது கொரியாவுக்கு சென்று வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இந்த நிலையில் காதலில் விழும் அவர், தனது கொரியா ஆசையை விடாமல் துரத்துகிறார். இதற்கிடையில் அவருக்கு கொரியாவுக்கு செல்வதற்கான ஒரு வாய்ப்பு அமைகிறது. சந்தோஷத்துடன் கொரியா செல்லும் அவர் அங்கு சந்தித்தது என்ன ? என்பது தான் படத்தின் மீதி கதை.
நெட்பிலிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் ரா.கார்த்திக் இயக்கி உள்ளார்.எதார்த்தமான ஒரு கதை மூலம் ரசிகர்களின் இதயங்களை வருடுகிறார். அடுத்து
படத்தில் மொத்த கதையையும் தூக்கி சுமந்துள்ளார் பிரியங்கா மோகன். மகிழ்ச்சி, சோகம், ஏமாற்றம், விரக்தி, தன்னம்பிக்கை என நடிப்பில் வியக்க வைத்துள்ளார். அவரின் காதலராக வரும் ரிஷிகாந்த், அழுத்தமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். இதர நடிகர்-நடிகைகளும் நேர்த்தியாக நடித்துள்ளனர். பிரசன்னா குமாரின் ஒளிப்பதிவு மற்றும் ஹேஷாம் அப்துல் வஹாப் இசை படத்திற்கு கூடுதல் பலம்.

Comments (0)
Add Comment