‘லவ் அண்ட் வார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
’96 ‘படத்தில் பள்ளிப் பருவ விஜய் சேதுபதி, திரிஷாவாக நடித்த ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் இருவரும் ஜோடியாக நடித்துள்ள படம் ‘லவ் அண்ட் வார்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கியுள்ளார். மேலும் இதில் கே.பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சரஸ் மேனன், ஜீவா ரவி, டி எஸ் ஆர் , நந்திதா ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு எல். ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்திருக்கிறார்.இந்த பீல் குட் பேமிலி என்டர்டெய்னர் திரைப்படத்தை ஆர்ஜின் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கண்ணா பாஸ்கர் தயாரித்திருக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர்கள் ஜீவா மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.