லோகேஷ் பட ஹீரோயினான சம்யுக்தா
மலையாள நடிகையான சம்யுக்தா மேனன், தனுஷின் வாத்தி படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். தற்போது தெலுங்கில் டெவில், பீம்லா நாயக், விருபாக்ஷா ஆகிய படங்களில் நடித்து பிஸியான நடிகையாக மாறினார். இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்க, பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தில் ஷூட்டிங் துவங்கியுள்ளது.