13 ஆம் தேதி ‘லோக்கல் டைம்ஸ்’ ரிலீஸ்
நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் லோக்கல் டைம்ஸ். இந்தத் தொடரில் ரிஷிகாந்த், அப்தூல் லீ, மௌரிஷ் தாஸ், அத்விதா அறுமுகம், ஆர்.பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரினி மற்றும் நந்திதா ஸ்ரீகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். 7 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடரை பேன் பாய் புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் ஜித்தின் துரை தயாரித்துள்ளார்.இதை பிரவீன் முத்துரங்கன் எழுதியுள்ளார், அபிநவ் கஸ்தூரா, பிரவீன் முத்துரங்கன், சாத்விக் கதே,தாமஸ் மானுவல் மற்றும் விஷ்வக் சென் பி. ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ளது.பிரைம் வீடியோவில் வரும் 13ஆம் தேதி தமிழ் ஒரிஜினல் காமெடி டிராமா தொடராக இந்த சீரிஸின் வெளியாகிறது