லிங்கேஷ், அனுமோல் நடிக்கும் ‘காயல்’

லிங்கேஷ், அனுமோல் நடிக்கும் ‘காயல்’
எழுத்தாளர் தமயந்தி கயல் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இதில் லிங்கேஷ், அனுமோல் ஆகியோர் லீட் ரோலில் நடிக்க, காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜஸ்டின் கெனன்யா இசை அமைக்கும் இந்த படத்தை ஜெ ஸ்டுடியோ சார்பில் ஜேசு சுந்தரமாறன் தயாரித்துள்ளார். ரிலீசுக்கு தயாராகி உள்ள இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் மித்ரன் ஜவஹர், மீரா கதிரவன், டிராஸ்கி மருது, அதிஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment