அமேசான் பிரைமில் ‘லீடர்’

அமேசான் பிரைமில் ‘லீடர்’
ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் கடந்த ஏப்ரல் 3ம் தேதி வெளியான படம் ‘லீடர்’. லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இதில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடிக்க, ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். திரையரங்குகளில் வரவேற்பை பெற்ற இந்த படம் இன்று மே 29 அன்று அமேசான் பிரைம் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Comments (0)
Add Comment