விக்ராந்த் நடிக்கும் ‘எல்பிடபுள்யூ

விக்ராந்த் நடிக்கும் ‘எல்பிடபுள்யூ
விக்ராந்த் நடிப்பில் ‘எல்பிடபுள்யூ(லவ் பியாண்ட் விக்கெட்) என்ற வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஜனவரி 1-ம் தேதி வெளியாகிறது. அருணா ராக்கி, கதை எழுத கணேஷ் கார்த்திகேயன் இயக்கியுள்ளார். இதில் சிந்து ஷியாம், நியதி, ஹரிஷ்,அயாஸ் கான், அக் ஷதா, நவீன், நிகில் நாயர், விஸ்வ மித்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆபீஸ், ஹார்ட் பீட் ,போலீஸ் போலீஸ் போன்ற வெப் தொடர்களைத் தொடர்ந்து கிரிக்கெட்டை மைய​மாகக் கொண்ட ‘எல்​பிடபுள்​யூ என்ற புதிய தொடரை ஹாட்​ஸ்​டார் அறி​முகப் படுத்​துகிறது. அட்லி ஃபேக்​டரி தயாரித்​துள்ள இந்த வெப் தொடர் மூலம் விக்​ராந்த் ​அறிமுக​மாகிறார். இது குறித்து விக்​ராந்த் கூறும்​போது, “எனக்கு மிக​வும் பிடித்த கிரிக்கெட்​டுடன் ஓடிடி தளத்​தில் அறி​முகமாவது மகிழ்ச்சியாக உள்​ளது. கிரிக்​கெட்​உடன் இருக்​கும் ஆழமான தொடர்பை உணர்​வுப்​பூர்​வ​மாக வெளிப்​படுத்த இத்​தொடர் எனக்கு வாய்ப்பு ஏற்​படுத்​திக் கொடுத்​துள்​ளது என்றார்.

Comments (0)
Add Comment