ரஜினி–கமல் படம் குறித்து மனம் திறந்த லதா ரஜினிகாந்த்

ரஜினி–கமல் படம் குறித்து மனம் திறந்த லதா ரஜினிகாந்த்
நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்க உள்ளார். இதற்கான கிளிம்ஸ் வீடியோ வெளியாகி வரவேற்பு பெற்றது. இந்த படம் குறித்து ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் கூறியது,

“இந்ந படம் அவர்களின் திரையுலக வாழ்க்கைப் பயணத் திற்கு ஒரு பெருமையான தருணம்.அவர்கள் இருவரும் நண்பர்களா கவும் சக நடிகர்களா கவும் எப்போதும் சிறப்பாக இருந்தவர்கள். இந்த படம் கே. பாலச்சந்தருக்கு பெருமை சேர்க்கும். ரஜினிக்கு ஓய்வு தேவைப்பட்டாலும், ரசிகர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அவர் தொடர்ந்து உழைத்து வருகிறார். அவர் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்” என தெரிவித்தார்.

Comments (0)
Add Comment