ரிலீசுக்கு ரெடியான குற்றம் கடிதல் 2

ரிலீசுக்கு ரெடியான குற்றம் கடிதல் 2
இயக்குநர் பிரம்மா இயக்கத்தில், ஜே எஸ் கே சதிஷ் குமார் தயாரிப்பில் உருவாகி, கடந்த 2014 ம் ஆண்டு வெளியான படம் குற்றம் கடிதல்.ஆசிரியர்–மாணவர் உறவை மையமாகக் கொண்டு உருவான இந்த படம் தேசிய விருதுகளை வென்றது. விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றது தற்போது, அதன் தொடர்ச்சியாக குற்றம் கடிதல் 2 படம் உருவாகி உள்ளது. இயக்குநர் எஸ் கே ஜீவா இயக்கத்தில், ஜே எஸ் கே சதிஷ் குமார் தயாரித்து முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.படத்தில் பாண்டியராஜன், அப்புக்குட்டி, பாலாஜி முருகதாஸ் , தீபக், பாவல், பத்மன், சாந்தினி தமிழரசன்,தேனப்பன்,கீர்த்தி சாவ்லா, விஜி சந்திரசேகர், லவ்லின் , ஜோவிதா,ரோஷன், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சதீஷ் ஒளிப்பதிவு செய்ய
டி கே இசையமைத்துள்ளார்.

Comments (0)
Add Comment