100 கோடி கிளப்பில் இணைந்த குபேரா
இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நாகார்ஜுனா தனுஷ் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளியான குபேரா படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. தமிழ் தெலுங்கு என ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் 5 நாட்களில் 100 கோடி வசூலை எட்டி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 100 கோடி கிளப்பில் குபேரா படமும் இணைந்துள்ளது. கடந்த ஆண்டு தனுஷ் இயக்கி நடித்த ராயல் படம் 100 கோடிக்கு மேல் வசூலை எட்டியது குறிப்பிடத்தக்கது.