சரத்குமாரை இயக்கும் கிங்ஸ்டன் பட இயக்குனர்

சரத்குமாரை இயக்கும் கிங்ஸ்டன் பட இயக்குனர்
‘ரேக்காசித்திரம்’ மற்றும் ‘மாளிகப்புரம்’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களை தயாரித்த காவ்யா பிலிம் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஆர். சரத்குமார் நடிக்கிறார். அவரின் பிறந்தநாளை அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, தற்காலிகமாக இந்த அறிவிப்பை வெளியிட்டனர். இப்படத்தை ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவான ‘கிங்ஸ்டன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் தொடங்கவுள்ளது. முழு படப்பிடிப்பையும் நவம்பருக்குள் முடிக்க படக்குழு திட்டமிட் டுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படம் ரிலீஸ்ஆகவுள்ளது. படத்திற்க்கு கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார்.

Comments (0)
Add Comment