ஷூட்டிங்கை முடித்த கென் கருணாஸ்

ஷூட்டிங்கை முடித்த கென் கருணாஸ்
‘அசுரன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அழுத்தமாக தடம் பதித்த கென் கருணாஸ், தற்போது பெயரிடப்படாத புதிய படத்தில் கதையின் நாயகனாகவும், இயக்குனராகவும் அறிமுகமாகிறார்.இதில் சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி, அனீஷ்மா அனில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ், நளினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர் வாழ்வியலை மையப்படுத்தி உருவாக்கி வரும் இதை பார்வதா என்டர்டெய்ன்மென் ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கருப்பையா சி. ராம் மற்றும் சுலோச்சனா குமார் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். செப்டம்பர் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இடைவிடாமல் 60 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது.

Comments (0)
Add Comment