ரிவால்வர் ரீட்டாவுக்காக காத்திருக்கும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படம் தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ளது.சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜேகே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே நிறைவடைந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாக இருந்தது. ஆனால், ஒரு சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்நிலையில், இந்தப் படம் வரும் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்த ரகு தாத்தா படம் தோல்வி அடைந்ததால் ரிவால்வர் ரீட்டாவின் வெற்றிக்காகக் காத்திருக்கிறார்.