கீர்த்தி சனோன், கங்கனா மோதல், எதிர்ப்பு: விளம்பர பட நீக்கம்
ரக்ஷா பந்தன் பண்டிகைக்காக மும்பையை சேர்ந்த தனியார் நகைக்கடை நிறுவனம் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்த விளம்பர படத்தை வெளியிட்டது. அதில், அவர் தன் சகோதரருக்கும் வளர்ப்பு நாய்க்கும் ராக்கி கட்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த காட்சியில் அவர் அணிந்திருந்த உடை ஆபாசமாக இருந்ததா கவும், ரக்ஷா பந்தன் சடங்கில் நாயை இடம்பெறச் செய்திருப் பதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்தன. இதனைத் தொடர்ந்து எம்.பி.,யும் நடிகையுமான கங்கனா ரணாவத்தும் இந்த விளம்பரத்தை விமர்சித்தார். “ரக்ஷா பந்தன் போன்ற பாரம்பரிய பண்டிகைக்காக பெண்கள் அணிய ஏராளமான உடைகள் இருக்கும்போது, கவர்ச்சியான உடையை ஏன் தேர்வு செய்ய வேண்டும்” என, அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கீர்த்தி சனோன், “ஒரு பெண்ணின் உடையை வைத்து அவரது கலாசார மரியாதையை அளவிட முடியாது” என்றார். இந்த எதிர்ப்புகளால் அந்த விளம்பரத்தை அனைத்து ஊடகங்களிலும் இருந்தும் நீக்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.