கமல் பட டைட்டில் நடிக்கும் கவின்

கமல் பட டைட்டில் நடிக்கும் கவின்
‘தண்டட்டி’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் உருவாகும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தில் கவின் ஹீரோவாக நடிக்க,அவருக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்கிறார். இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். கிராமத்து பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரிக்க,ஏ வெங்கடேஷ் இணை தயாரிப்பு செய்கிறார். இப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் பூஜையுடன்
துவங்கியது. படப்பிடிப்பை கலைப்புலி எஸ். தானு கிளாப் போர்ட் அடித்து தொடங்கி வைத்தார்.இந்த விழாவில் இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, ஆன்ட்ரூ லூயிஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment