21 ஆண்டுகளுக்குப் பிறகு டோலிவுட்டில் கத்ரீனா

21 ஆண்டுகளுக்குப் பிறகு டோலிவுட்டில் கத்ரீனா
நடிகர் பிரபாஸ் நடிப்பில், இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‛ஸ்பிரிட்”. அதிரடி ஆக்சன் கலந்த போலீஸ் கதையான இதன் படப்பிடிப்பு 40 சதவீதம் முடிவடைந்து ள்ளது. இப்படத்தில் பிரபாஸூடன் திரிப்தி திம்ரி, விவேக் ஓபராய், ஐஸ்வர்யா தேசாய், காஞ்சனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதற்காக பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கத்ரீனா கைப், விக்கி கவுசல் தம்பதிக்கு கடந்த ஆண்டு நவம்பரில் விஹான் கவுசல் என்ற மகன் பிறந்தான். மகன் பிறந்து 8 மாதங்களே ஆவதால் படங்களில் நடிப்பதை தவிர்த்து மகனை பராமரிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார் கத்ரீனா கைப். அதனால் சில நிபந்தனைகளுடன் இதில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதன் மூலம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு கத்ரீனா டோலிவுட்டிற்கு திரும்பும் படமாக இது இருக்கும். இந்த ஸ்பிரிட் படம் மார்ச் 5, 2027ல் பல மொழிகளில் வெளியாகிறது.

Comments (0)
Add Comment