கத்தனார்’ டிரெய்லர் மிரட்டும் அனுஷ்கா ஷெட்டி

கத்தனார்’ டிரெய்லர் மிரட்டும் அனுஷ்கா ஷெட்டி
கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கோபாலன் தயாரிப்பில், நடிகர்கள் ஜெயசூர்யா, பிரபுதேவா, அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கத்தனார்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ‘ஹோம்’ படத்தின் மூலம் பலரது பாராட்டுகளைப் பெற்ற இயக்குநர் ரோஜின் தாமஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆர். ரமானந்துடன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார். இந்த நிலையில் 2 நிமிடம் 49 விநாடிகள் ஓடும் இதன் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 15 மொழிகளில் படம் ரிலீஸ் ஆக உள்ளது

Comments (0)
Add Comment