3 நாளில் 22 கோடி வசூல் செய்த கட்டா குஸ்தி 2
செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்த கட்டா குஸ்தி 2 படம் கடந்த 3ஆம் தேதி ரிலீசானது. இதில் ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன், மோக்ஷா, குழந்தை நட்சத்திரம் சாரா,கருணாஸ், முனீஸ்காந்த் லிசி, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அடங்க நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் 22 கோடி அளவுக்கு வசூல் செய்துள்ளதாக பட குழு அறிவித்துள்ளது.