கேம் பிளே’ பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்
காளிதாஸ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ் தனது அடுத்த தயாரிப்பாக ‘கேம் பிளே’ என்ற படத்தை தயாரிக்கி ன்றனர்.‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியை 4 சீசன் வரை இயக்கிய சிவநேசன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.இதில் கிஷோர் மற்றும் சாருகேஷ் ஆகியோர் லீட் ரோலில் நடிக்க, ஷாலி நிவேகாஸ், வினோத் கிஷான், சார்லி உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைக்க,சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார். பைனான்ஸியல் க்ரைமை மையமாகக் கொண்டு, நொடிக்கு நொடி எதிர்பாராத திருப்பங்களுடன் சஸ்பென்ஸ் இன்வஸ்டிகேசன் திரில்லராக உருவாகி வருகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.