சூப்பர் மேன் களுக்கு குரல் கொடுத்த கார்த்திக்,அர்ஜுன்

சூப்பர் மேன் களுக்கு குரல் கொடுத்த கார்த்திக்,அர்ஜுன்
ஹாலிவுட் இயக்குனர் டிராவீஸ் நைட் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹீ மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் தி யுனிவர்ஸ் படம், ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் ஜூன் 5ம் தேதி அன்று வெளியாக உள்ளது.ஏற்கனவே வெளியானஇப்படத்தின் ஆங்கில டிரெய்லர் ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான தமிழ் டிரெய்லரும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில்,பின்னணிப் பாடகர் கார்த்திக், வில்லன் நடிகர் ஆதித்யா மேனன், குணச்சித்திர நடிகர் அர்ஜுன் ஆகியோர் சூப்பர்ஹீரோ கேரக்டர்களுக்கு குரல் கொடுத்துள்ளனர்.

Comments (0)
Add Comment