வீரப்பனாக கலக்கும் கார்த்தி

நடிகர் கார்த்தி தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் “வா வாத்தியார்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரின் 26வது படமாககும். இதில் எம்.ஜி.ஆர். ரசிகனாக கார்த்தி நடிக்கிறார்.

அதனை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். இதில் ஹீரோயினாக மாளவிகா மோகன் நடிக்கிறார். அதோடு தெலுங்கு இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் நானி நடிப்பில் வெளியான ‘ஹிட் 3’ படத்தின் இறுதியில் அடுத்த பாகத்திற்கான லீட் இருந்தது. அதில் போலீசாக கார்த்தி தோன்றியிருந்தார். இந்த நிலையில் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு ஹிட்-4 படத்தில் கார்த்தி நடிக்கும் போலீஸ் கேரக்டர் பெயர் வீரப்பன் என அறிவித்து அதற்கான போஸ்டரையும் வெளியிட்டு இருந்தனர். இது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

Comments (0)
Add Comment