கர விமர்சனம்

கர விமர்சனம்
ஊரில் சின்ன சின்ன திருட்டுகள் செய்து வரும் தனுஷ், போலீசில் சிக்குகிறார். அங்கிருந்து தப்பித்து மனைவி, நமீதா பைஜுவுடன் திருந்தி வாழ்கிறார். அப்போது அவரது தந்தை கே எஸ் ரவிக்குமார் திடீரென இறந்துவிட, தந்தையை தங்கள் நிலத்தில் புதைக்க வங்கி அனுமதிக்காததால் அந்த பேங்கில் கொள்ளை அடிக்க திட்டம் போடுகிறார். அவர் வங்கியில் கொள்ளை அடித்தாரா? அல்லது அவரை டிஎஸ்பி சுராஜ் வெஞ்சரமுடு பிடித்தாரா? என்பதே படத்தின் மீது கதை. தான் ஒரு நடிப்பு அசுரன் என இந்தப் படத்திலும் தனுஷ் நிரூபித்துள்ளார். ஆக்‌ஷன்,காதல்,அப்பா சென்டிமென்ட்என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். இதுவரை நடித்திராத உடல் மொழியில் தனுஷ் அப்பாவாக நடித்துள்ள இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வாழ்ந்திருக்கிறார். நமிதா பைஜுவின் நடிப்பு எதார்த்தம். போலீஸ் அதிகாரியாக வரும் சுராஜ் மிரட்டலான நடிப்பால் கைத்தட்டல் வாங்கி இருக்கிறார்.வங்கி அதிகாரி ஜெயராம், மாமா கருணாஸ், பிரித்வி பாண்டியராஜ் ஆகியோர் நடிப்பு கதைக்கு பலம். அப்பா பாசம், விவசாயிகள் பிரச்னை, பேங்க் கடன், ஜப்தி என அனைத்தையும் எமோஷன் கலந்து திருடன், போலீஸ் விளையாட்டாக திரைக்கதையை சுவாரஸ்யமாக இயக்குனர் விக்னேஷ் ராஜா கொடுத்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசை,தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு சூப்பர்.

Comments (0)
Add Comment